தெற்கு லிபியாவில் நடந்த இன மோதல்களில் 40 பேர் பலி

லிபியாவின் தெற்கு பகுதியில் இரண்டு இனக்குழுகளுக்கு இடையே நடந்த மோதலில் இதுவரை 40 பேருக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சகாரா பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள பெரிய நகரமான சாபாவில் டொபொயு மற்றும் துவாரெக் இன மக்களிடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான கும்பங்கள் தங்கள் வசிப்பிடத்தை விட்டு அகதிகளாக செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பிப்ரவரி மாதம் முதல் இந்த இரண்டு இனக்குழுக்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நடைபெற்ற மோதலில் 40 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அம்மாகாண அரசு மோதலை நிறுத்திவிட்டு பேச்சு வார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி கோரிக்கை விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply