பொதுமக்கள் யுத்த சூனிய பிரதேசத்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதால் படையினர் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர்.

பொதுமக்கள் யுத்த சூனிய பிரதேசத்தில் இருந்து வெளியேற முயற்சிப்பதால் படையினர் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். புலிகளைக் கடற் கரையோரமாக 15 சதுரக் கிலோ மீற்றரிலும் தரைப் பகுதியில் 15 சதுரக் கிலோ மீற்றரிலுமாக, ஆகமொத்தம் 30 சதுரக் கிலோ மீற்றருக்குள் முடக்கப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் முல்லைத்தீவில் தாம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்ற போதிலும் அது வெற்றியளிக்க மாட்டாது எனவும், படையினரின் முன்னரங்க பகுதிகள் முல்லைத்தீவு புதுமாத்தளன் வடக்கில் இருந்து முல்லைத்தீவு களப்பு பகுதி வரையும் நீண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகள் தமது முன்னரங்க பகுதிகளுக்கு போர் பயிற்சி கொடுத்து பொதுமக்களை அனுப்பி வருகின்றனர். அத்துடன் புலிகள் பொதுமக்களுடன் கலந்து பல இடங்களில் வெளியேற முயற்சிப்பதால் படையினர் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தியுள்ளதாகவும் சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply