கொல்­லப்­பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இன் இலங்கை பிரஜை முன்னாள் அதிபர்

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இலங்­கை­ய­ரான நிலாம் முஹ்ஸின் என்­ பவர் இணைந்து போரிட்டு சிரி­யாவில் வைத்து தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டமை தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விசா­ர­ணை­களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடிக் கட்­டுப்­பாட்டில் மத்­தி­ய­ மா­காணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸா­நா­யக்­கவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­க­ளி­லேயே பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

சிரி­யாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­படும் நபரின் தேசிய அடை­யாள அட்டை கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறிய பொலிஸ் ஊடக பேச்­சாளர், அதன் படி இந்த நபர் கண்டி பிர­தே­சத்தில் வசித்­து­வந்­துள்­ளமை உறுதிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்பிட்டார். அத்துடன் கலே­வலை மற்றும் கொலன்­னாவ ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள இரு சர்­வ­தேச பாட­சா­லை­களில் அவர் அதி­ப­ராகக் கட­மை­யாற்­றி­யுள்­ள­மையும் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ள­தாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர குறிப்­பிட்டார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி திஸா­நா­யக்­கவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விஷேட விசா­ர­ணை­களில் நேற்று வரை பல்­வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த நிலையில், குறி த்த நபர் சிரி­யாவில் கொல்­லப்­பட் ­டுள்­ள­மையும் உறுதிசெய்­யப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் இந்த விஷேட விசா­ர­ணை­யா­னது பல்­வேறு கோண ங்­களை நோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ள ­துடன் சமூக வலைத்­த­ளங்கள் மற் றும் அறி­வியல் ரீதி­யி­லான சாத­னங்­களை ஆராயும் நட­வ­டிக்­கை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இத­னை­வி­ட கலே­வலை மற்றும் கொலன்­னாவ ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள இரு வேறு சர்­வ­தேச பாட­சா­லை­களில் இருந்து நிலாம் முஹ்ஸின் தொடர்­பி­லான தக­வல்­களை பொலிஸார் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

குறித்த நபர் ஐ.எஸ். அமைப்­பு டன் தொடர்பு பட்ட விதம், அவர் நாட்டை விட்டு வெளி­யேறிய விதம் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமை ப்­புடன் தொடர்­பு­டையோர் வேறு எவ­ரேனும் உள்­ள­னரா போன்ற விட­யங்­களை உள்­ள­டக்கி இந்த விரி­வான விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

பாகிஸ்தான் பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் பட்டம் பெற்­றுள்ள குறித்த நபர் கொழும்பு பல­்க­லைக்­க­ழ­கத்­திலும் விரி­வு­ரை­ய­ாள­ராகக் கடமை புரிந்­துள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன. பொலிஸார் அது தொடர்­பிலும் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக் கது.

கலே­வலை பிர­தே­சத்தில் உள்ள சர்­வ­தேச பாட­சா­லையில் குறித்த நபர் அதிபராக கடமையாற்றியமை க்கான எழுத்து மூலசான்று ஆவ ணங்கள் எதனையும் விட்டு வைக் காத நிலையிலேயே அங்கிருந்து சென்றுள்ளதாக குறிப்பிடும் பொலி ஸார் அது தொடர்பில் பாடசாலை உரிமை யாளர், தற்போதைய அதிபர் உள்ளிட்டவர்களிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply