பூமியைப் போல புதிய கோளை கண்டுபிடித்தது நாசா
பூமியைப் போல புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் நாசா அறிவித்துள்ளது. இந்தக் கோள் சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாசாவின் சக்திவாய்ந்த கெப்ளர் தொலைநோக்கி விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்று வேறு கோள்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், பூமியைப் போன்ற புதிய கோளைக் கெப்ளர் விண்கலம் கண்டறிந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதுகுறித்த ஆய்வின் கடைசிக் கட்டத்தில் விஞ்ஞானிகள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. கெப்ளர் 452 பி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள், படும் இந்த கோள், பூமியில் இருந்து சுமார் 1400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
பூமியில் உள்ள தட்பவெப்ப நிலையை ஒத்த தட்பவெப்பநிலை புதிதாக கண்டறியப்பட்ட கோளிலும் காணப்படுவதாக டெல்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார்.
இந்தப் புதிய கோளை ஆராய்ந்த ஆய்வாளர்கள், உயிரினங்கள் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற தண்ணீர் மற்றும் தட்ப வெப்பநிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். பூமியை விட சுமார் 60 சதவிகிதம் வரை அளவில் பெரிதாக இருக்கும் புதிய கோள், 385 நாட்களுக்கு ஒருமுறை சூரியனை முழுமையாக சுற்றி வருவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply