துருக்கியில் தீவிரவாதிகள் தாக்குதல் : காவல் அலுவலர் பலி

துருக்கியில் காவல் அலுவலர் ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். அவருடன் இருந்த மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. துருக்கியில் குர்து இன மக்கள் அதிகம் வசிக்கும் தியார்பகீர் என்ற பகுதியில் இத்தாக்குதல் நடந்தது. அண்மைக்காலமாக அந்நாட்டில் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

மற்றொரு இடத்தில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதல்களுக்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு நாள் முன்னர் சீலான்பினார் என்ற இடத்தில் நடந்த இது போன்ற வேறொரு தாக்குதலில் இரண்டு காவல் அலுவலர்கள் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply