இராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களில் இலக்கத் தகடுகளை மாற்றி பயணிப்பதற்கு முடியும்”

இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்தும் வாக­னங்­களில் இலக்­கத்­த­க­டு­களை மாற்­றிக்­கொண்டு பய­ணிப்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கை­யி­லேயே மிரி­ஹானை பகு­தியில் கைப்­பற்­றப்­பட்ட வாக­னத்தின் இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்­டுள்­ளது. மாறாக அது போலி­யான இலக்­கத்­த­கடு அல்ல. இதனை அர­சி­ய­லாக்­கு­வ­தற்கு எதிர்க்­கட்­சி­யினர் முயற்­சிக்­கின்­றனர். அவ்­வாறு எந்த விட­யமும் இதில் இல்லை என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச் ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார். மேஜர் ஜெனரல் பிர­சன்ன டி. சில்வா யுத்த காலத்தில் சிறப்­பாக செயற்­பட்ட திற­மை­யான அதி­காரி. அவர் முன்னாள் பாது­காப்பு செய­லா­ள­ருக்கு நெருக்­க­மாக செயற்­பட்­டவர். எனவே இந்த வெள்ளை வேன் விவ­கா­ரத்­தினால் கோத்­த­பாய மற்றும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் உயிர்­க­ளுக்கு ஆபத்து என்­ப­தனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

குறிப்­பாக இந்த விட­யத்தில் நாங்­களே சந்­தே­கப்­ப­ட­வேண்­டி­யி­ருந்­தது. எவ்­வா­றெ­னினும் தற்­போது இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணைகள் சி.ஐ.டி. யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­ கையில்,

இம்­மாதம் 20 ஆம் திகதி மிரி­ஹானை பகு­தியில் வெள்ளை வேன் ஒன்று பொலி­ஸாரால் பரி­சோ­திக்­கப்­பட்­ட­போது அதி­லி­ருந்து இரா­ணுவ வீரர்கள் மூவர் கைது செய்­யப்­பட்­ட­துடன் பிஸ்டல் ஒன்றும் கைப்­பற்­ற­ப்­பட்­டுள்­ளது. இந்த வாக­னத்தின் இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்­டி­ருந்­துள்­ளது. உண்­மை­யான இலக்­கத்­த­கட்டின் இலக்­க­மா­னது றா.எச்.ஏ. 59466 என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது மேஜர் ஜெனரல் பிர­சன்ன சில்வா பயன்­ப­டுத்தும் வாக­ன­மாகும். கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ வீரர்கள் பிர­சன்ன டி. சில்­வாவின் பாது­காப்பு அதி­கா­ரிகள். கைது செய்­யப்­பட்ட பின்னர் இவை தொடர்பில் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. புலி­க­ளி­ட­மி­ருந்து 767 வாக­னங்கள் கைப்­பற்­ற­ப்பட்­டி­ருந்­தன. அவற்றை விசேட ஏற்­பா­டு­களின் கீழ் இரா­ணு­வத் தி னர் பயன் ­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

2013 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் இந்த வாக­னங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவே இதற்­கான அனு­ம­தியை அளித்­துள்ளார். தற்­போது கைப்­பற்­றப்­பட்­டுள்ள வாக­னமும் புலி­க­ளிடம் இருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தாகும். மேஜர் ஜெனரல் பிர­சன்ன சில்வா என்­பவர் மிகவும் திற­மை­யான இரா­ணுவ அதி­காரி மாவி­லாறு முதல் நந்­திக்­கடல் வரை இவர் யுத்­தத்தை வழி நடத்திச் சென்­றவர். யாரிடம் சிக்­கி­னாலும் பிர­சன்ன சில்­வா­விடம் சிக்­கி­வி­டக்­கூ­டாது என்று ஒரு முறை பிர­பா­க­ரனே கூறி­யுள்ளார். அந்­த­ள­வுக்கு திற­மை­யான இரா­ணுவ அதி­காரி.

அது மட்­டு­மன்றி பிர­சன்ன டி. சில்வா முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷ­வுடன் நெருக்­க­மாக இருந்­தவர். 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவர் சீனா­வுக்கு ஒரு பயிற்சி நெறிக்­காக சென்­றி­ருந்தார். தற்­போது மிலிட்­டரி இணைப்­பா­ள­ராக கட­மை­யாற்­று­கின்றார். இந்­நி­லையில் இந்த வெள்ளை வேன் விவ­கா­ரத்­தினால் கோத்­த­பாய மற்றும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் உயிர்­க­ளுக்கு ஆபத்து உள்­ள­தாக கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

குறிப்­பாக இந்த விட­யத்தில் நாங்­களே சந்­தே­கப்­ப­ட­வேண்­டி­யி­ருந்­தது. எவ்­வா­றெ­னினும் தற்­போது இந்த விவ­காரம் குறித்த விசா­ர­ணைகள் சி.ஐ.டி. யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன. எதிர்க்­கட்­சி­யினர் இதனை அர­சி­ய­லாக்­கு­வ­தற்கு முயற்சிக்­ கின்­றனர். அவ்­வாறு எந்த விட­யமும் இதில் இல்லை. இரா­ணு­வத்­தினர் பயன்­ப­டுத்தும் வாக­னங்­களில் இலக்­கத்­த­க­டு­களை மாற்­றிக்­கொண்டு பய­ணிப்­ப­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கை­யி­லேயே இந்த வாக­னத்தின் இலக்­கத்­த­கடு மாற்­றப்­பட்­டுள்­ளனர். மாறாக அது போலி­யான இலக்­கத் ­த­கடு அல்ல. இதே­வேளை ஐ.எஸ். அமைப்பில் செயற்­பட்ட இலங்­கையர் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் அவரின் குடும்ப உறுப்­பி­னர்­களை கைதுசெய்து விசா­ர­ரணை நடத்­து­மாறு பிர­தமர் உரிய தரப்­பி­ன­ருக்கு அறி­வு­றுத்தல் வழங்­கி­யுள்ளார்.

கேள்வி: ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு என்ன நடந்­தது?

பதில்: அவை விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. நாம் பல சவால்­களை எதிர்­கொண்டே இவற்றை செய்­கின்றோம். ராஜ­ப­க் ஷக்­க­ளுக்கு எதி­ராக 7000 குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. அவற்றில் 52 குற்­றச்­சாட்­டுக்கள் விசா­ரிக்­கப்­பட்டு முடிந்­துள்­ளன. விளை­யாட்டு வீரர் தாஜு­தீனின் கொலை விவ­கா­ரமும் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. விரைவில் அனைத்து விப­ரங்­க­ளையும் வெளி­யி­டு வோம். அரசாங்கம் மாறினாலும் இன்னும் அரச கட்டமைப்பு மாறவில்லை. இன் னும் அதிக இடங்களில் ராஜபக் ஷ நிய மித்த அரசாங்க அதிகாரிகளே உள்ளனர். பல விசாரணைகளுக்கு அரச அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர்.

கேள்வி: வெள்ளை வேன் விவகாரம் மூல மாக மஹிந்த ராஜபக் ஷவுக்கு உயிர் அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளாரே?

பதில்: இவை தொடர்பில் சி.ஐ.டி. யினர் விசாரிக்கின்றனர்.

கேள்வி: மஹிந்த ராஜபக் ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக உங்களுக்கு அறிவிக் கப்பட்டுள்ளதா?

பதில்: ஒரு முறைப்பாடு கூட செய்யப் படவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply