சமுதாயத்தை நல்வழிப்படுத்த வணக்கஸ்தளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் : ஜனாதிபதி
சிறந்த ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு வணக்கஸ்தளங்கள் அதிகமதிகமாக நிர்மாணிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். சிறந்த சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கான பாரிய பொறுப்பு பிக்குகள் மற்றும் மதகுருமார்களுக்கு இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாவனல்லை உடுமுல்லை, ருவன்புரவிலுள்ள ஸ்ரீ நிக்ரோதாராம விகாரையில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
வணக்கஸ்தளங்களுடன் ஏற்படும் நெருக்கம், சகோதரத்துவம் மற்றும் ஒன்றிணைப்பானது நாட்டையும் சமூகத்தையும் பாரியளவில் பக்திமயப்படுத்துவதுடன் சமூக ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply