மஹிந்தவின் விரலை பிடித்தவரிடம் விசாரணை?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விரலைப் பிடித்தவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அண்மையில் அக்குரஸ்ஸ பிரதேதசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விரலை ஆதரவாளர் ஒருவர் இறுக்கிப் பிடித்ததாகவும் இதனால் கோபமுற்ற மஹிந்த அவரைத் தாக்கியதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் விரலை பிடித்த நபரிடம் அக்குரஸ்ஸ பொலிஸார் விசாரணை நடத்த உள்ளனர்.விரலை பிடித்த நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த விஜயதுங்க என்ற நபரே இவ்வாறு ஜனாதிபதியின் விரலைப் பிடித்துள்ளார்.

இந்த நபர் கடுமையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்படாத காரணத்தினால் அவரிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொண்டு அவரை அனுப்பி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply