சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மீது துருக்கி விமானங்கள் குண்டு வீச்சு
துருக்கியில் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 32 பேர் பலியானார்கள். ஐ.எஸ்.தீவிரவாதிகள் மற்றும் குர்தீஸ் தீவிரவாதிகளாலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக துருக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. சிரியாவின் எல்லையில் சோதனை நடத்தி நூற்றுக் கணக்கான தீவிரவாதிகளை கைது செய்தது. அவர்களில் குர்தீஸ் தீவிரவாதிகளும் அடங்குவர்.
பின்னர் துருக்கி அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோ கன் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் டெலிபோனில் பேசினார். அதை தொடர்ந்து சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு நேற்று துருக்கு போர் விமானங்கள் சிரியாவில் அலெப்போ மாகாணத்தில் வடகிழக்கு பகுதியில் பறந்து ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது சரமாரியாக குண்டு வீசியது.
இந்த தாக்குதலில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர். ஐ.எஸ்.தீவிரவாதிகள் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
தற்போது அமெரிக்காவுடன் துருக்கியும் இணைந்து முதன் முறையாக நேற்று குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் சிரியா எல்லையில் தனது வான் எல்லையில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்து தீவிரவாதிகள் மீது குண்டு வீசவும் துருக்கி அனுமதி வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply