கென்யாவில் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா உதவி: ஒபாமா அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ஆன பிறகு ஒபாமா முதன் முறையாக தனது தந்தை பிறந்த நாடான கென்யாவுக்கு சென்றுள்ளார். தலைநகர் நைரோபி சென்ற அவரை விமான நிலையத்தில் குடும்பத்தினரும், அந்நாட்டு அதிபர் உகுரு கென்யாடாவும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர் கென்யா அதிபர் உகுரு கென்யாட்டாவை சந்தித்து பேசினார். அப்போது சோமாலியாவில் அல்கொய்தா உதவியுடன் செயல்படும் அல்–ஷபாப் தீவிரவாதிகளின் அட்டகாசம் குறித்து அவர் ஒபாமாவிடம் எடுத்துரைத்தார்.
அவர்களின் தாக்குதல்கள் குறித்தும் கவலை தெரிவித்தார். அதை உன்னிப்பாக கேட்ட ஒபாமா அல்–ஷபாப் தீவிரவாதிகளை ஒடுக்க சோமாலியாவுடன் இணைந்து கென்யாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
தீவிரவாதிகளை ஒடுக்க கென்யாவுக்கு அமெரிக்கா தேவையான பணஉதவி மற்றும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் கூறினார். இதற்கு கென்யா அதிபர் கென்யட்டா வரவேற்பு தெரிவித்தார். இப்பேச்சு வார்த்தையின் போது துணை அதிபர் விக்கியம் ரூடோ உடனிருந்தார்.
மேலும், கென்யாவுடன் ஆன வர்த்தக உறவை அமெரிக்கா மேம்படுத்த விரும்புவதாகவும் ஒபாமா கூறினார். கென்யாவில் ஊழலை ஒழிக்கவும் அவர் வலியுறுத்தினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply