ஏமனில் சவுதி கூட்டுப்படைகள் குண்டுமழை: 55 பேர் கொன்று குவிப்பு
ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், சவுதிக்கு அதிபர் மன்சூர் ஹாதி தப்பி ஓடி விட்டார். ஏமனில் மீண்டும் அவரது ஆட்சியை ஏற்படுத்துவதற்காக சவுதி கூட்டுப்படைகள் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் அடங்கியவை), ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் வான்தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், ஏமனின் தைஜ் நகரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் குண்டு மழை பொழிந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 55 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.
இது தொடர்பாக அந்த நிறுவனம், “தைஜ் நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தின் என்ஜினீயர்கள், தொழிலாளர்கள், இடம் பெயர்ந்து வந்த குடும்பங்கள் வசித்து வந்த மோக்கா பகுதியை குறி வைத்து சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தின. இதில் 55 பேர் உயிரிழந்தனர்” என கூறியது. அங்கு இன்னும் மீட்பு பணிகள் முடிவு அடையாததால், பலி எண்ணிக்கை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply