வியாழன் கிரகத்தில் உள்ள நிலவுகளில் மனிதர்கள் வாழ முடியுமா?: விஞ்ஞானிகள் ஆய்வு
ப்ளூட்டோவின் வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்து, சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்களில் உள்ள குளிர்ச்சியான நிலவுகளில் மனிதன் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சூரிய குடும்பத்திலேயே மிகப்பெரிய கிரகம் என்ற பெருமையை பெற்றது வியாழனாகும். வியாழன் கிரகத்தின் 66 நிலவுகளில், 6-வதாக காணப்படுவது யுரோபா நிலவாகும். பூமியின் நிலவைவிட சற்றே சிறியதான, யுரோபா நிலவு, சிலிக்கேட் பாறைகளால் ஆனது. இதன் கரும்பகுதியில் இரும்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு பள்ளம் மேடற்றது. இதன் அடிப்பகுதியில், கடல் இருக்கலாம் என்றும், பூமியைப் போன்று வாழ்வதற்கு ஏற்றதாக இந்த நிலவு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த வார தொடக்கத்தில், ஐரோப்பிய விண்வெளிக் கழகம், விமான உற்பத்தி துறையின் ஜாம்பவானான ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து சனி கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலவு, வியாழன் கிரகத்தின் யுரோபா, கானிமேட், கேலிஸ்டோ என்று மொத்தம் நான்கு நிலவுகளில் உள்ள கூடுதல் புவிச் சூழல் (existence ) குறித்து வருகிற 2022-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply