ஜப்பானில் கோர விபத்து குடியிருப்பு பகுதியில் குட்டி விமானம் விழுந்ததில் 3 பேர் பலி வீடுகள், கார்கள் தீப்பிடித்து எரிந்தன
டோக்கியோஜப்பானில் குட்டி விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார்கள், வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.குட்டி விமானம் ஒற்றை என்ஜினும், 5 இருக்கைகளும் கொண்ட குட்டி விமானம் ஒன்று, ஜப்பானில் உள்ள சோபு விமான நிலையத்தில் இருந்து நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு பயிற்சிக்காக புறப்பட்டது.அது, டோக்கியோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள இஸூ ஒஷிமா தீவு நோக்கி பறந்தது. விமானத்தில் விமானியும், 4 பயணிகளும் பயணம் செய்தனர்.குடியிருப்பு பகுதியில் விழுந்தது.
இந்த நிலையில் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் அந்த விமானம் சற்றும் எதிர்பாராத வகையில், குடியிருப்பு பகுதி ஒன்றில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கு 3 வீடுகள், 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், பல வீடுகளின் கூரைகள் தீப்பிடித்து எரிந்தன.இந்த கோர விபத்தில் விமானியும், ஒரு பயணியும் உயிரிழந்தனர். மேலும், வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் பரிதாபமாக பலி ஆனார். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.பலத்த சத்தம்
விபத்தை நேரில் கண்ட ஒரு பெண், செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், ‘‘பூமி அதிர்ந்தது போல உணர்ந்தேன். முதலில் ஒரு லாரிதான் வீட்டின் மீது மோதிவிட்டது என்று நினைத்தேன். அதன்பின்னர்தான் பெரும் புகை மண்டலத்தை பார்த்தேன். அப்போதும் விமானம் மிகவும் தாழ்வாக பறப்பதாகத்தான் நினைத்தேன். அதன்பின்னர் நான் பலத்த சத்தத்தை கேட்டேன். அப்புறம்தான் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்ததை உணர்ந்தேன்’’ என்று கூறினார்சம்பவ இடத்தில் தீயை அணைக்க தீயணைப்பு படை வீரர்கள் போராடியதையும், விமானத்தின் வால் பகுதி விழுந்ததில் ஒரு கார் உருக்குலைந்து கிடந்ததையும் டெலிவிஷன்கள் படம் பிடித்து காட்டின.விசாரணை
தீயணைப்பு படை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த குட்டி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் மாரடைப்பாலும், நுரையீரல் பாதிப்பாலும் உயிரிழந்தனர். 3 பயணிகளும், பொதுமக்களில் 2 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்’’ என்றனர்.இந்த விபத்தின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை. இருப்பினும் மனித தவறினால்தான் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply