தரை இறங்கும்போது விமானத்துக்கு தீ வைக்க முயன்ற பயணி சிப்பந்திகள் மடக்கிப் பிடித்தனர்
பீஜிங்சீனாவில் ஹாங்காங் அருகே உள்ள தாய்ஜோ நகரில் இருந்து குவாங்ஜோ நகருக்கு ஷென்ஜென் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்றது. அந்த விமானத்தில் 95 பயணிகளும், 9 சிப்பந்திகளும் இருந்தனர். விமானம் அதிகாலை ஒரு மணி அளவில் தரை இறங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு ஆண் பயணி லைட்டர் மூலம் விமான இருக்கைக்கு தீவைக்க முயன்றார்.உடனே இதைப்பார்த்த விமான சிப்பந்திகள் சில பயணிகள் துணையுடன் அவரை தடுத்து மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவத்தால் விமானத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்க முயற்சித்தனர். இதில் 2 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.சில பயணிகள் அவசரகால வெளியேறும் கதவையும் திறக்க முயற்சித்தனர். இதனால் விமான சிப்பந்திகளுக்கும், பயணிகளுக்கும் லேசான மோதலும் ஏற்பட்டது. விமானம் தரை இறங்கியதும் பயணிகளும், சிப்பந்திகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக தீவைக்க முயன்றவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த விமான நிலையத்தில் சிறிது நேரம் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி விரிவான தகவல்கள் வெளியிடப்படாவிட்டாலும், சீன சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் பற்றிய புகைப்படங்கள் வெளியானது. அதில், விமானத்தின் ஒரு இருக்கை கருகி இருப்பதும், அவசரகால வெளியேறும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததும் தெரிந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply