17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பாசன வசதி பெறும் கிருஷ்ணகிரி, கெலவரபள்ளி நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு ஜெயலலிதா உத்தரவு
கிருஷ்ணகிரி, கெலவரபள்ளி நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று (திங்கட்கிழமை) தண்ணீர் திறந்துவிட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து, வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடதுபுறக் கால்வாய் வாயிலாக முதல் போக பாசனத்திற்காக 27–7–2015 (இன்று) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கப் பாசன அமைப்பின்கீழ் உள்ள 9012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.கெலவரபள்ளி நீர்த்தேக்கம்
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய் வாயிலாக முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரபள்ளி நீர்த்தேக்கத்தில் இருந்து வலது மற்றும் இடது பிரதானக் கால்வாய் வாயிலாக முதல் போக பாசனத்திற்காக 27–7–2015 (இன்று) முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply