தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் நிலைப்பாட்டை மு.கா.வரவேற்கின்றது : ஹசன்

வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல்விஞ்­ஞா­பனம் வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். இந்த நிலைப்­பாட்டை வெறும் பேச்சில் மட்டும் இல்­லாது தமிழ், முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் பேச்­சு­வார்த்தை­களின் மூலம் வென்­றெ­டுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது. இரண்டு சமூ­கத்­துக்கும் இடையில் எவ்­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாது,

முஸ்லிம் மக்­களின் தனித்­துவம், இருப்பு, அவர்­களின் உரி­மைகள் என அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை வழங்­கப்­ப­டு­வதும், அவர்­க­ளது நிலங்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் உறுதிப் படுத்­தப்­பட வேண்டும் எனவும் முஸ்லிம் காங்­கிரஸ் தெரி­வித்­தது.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் குறிப்­பிடப் பட்­டி­ருக்கும் வடக்கு கிழக்கு இணைந்த தமி­ழக தாயக் கோரிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

வடக்கு, கிழக்கு இணைந்த தமி­ழக தாய­கத்தை உரு­வாக்­கு­வதே தமிழ் பேசும் மக்­களின் நீண்­ட­கால நிலைப்­பா­டாகும். எமது எதிர்­பார்ப்பும் அது­வே­யாகும். வடக்கு, கிழக்கு இணைந்த தாய­கத்தை உரு­வாக்­கு­வது என்ற நிலைப்­பாட்டில் இருந்து நாம் ஒரு­போதும் மாற­வில்லை. ஆனால் தமிழ் பேசும் மக்கள் என்ற கட்­ட­மைப்பில் தமிழ் மக்­க­ளைப்போல் முஸ்லிம் மக்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இந்த இரண்டு சமூ­கமும் ஒன்­றி­ணைந்து வடக்­கையும் கிழக்­கையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்த வேண்டும் என்­பதே நியா­ய­மான நிலைப்­பா­டாகும். குறிப்­பாக இரண்டு சமூ­கங்களுக்கும் இடையில் எவ்­வித முரண்­பா­டு­களும் ஏற்­ப­டாது, முஸ்லிம் மக்­களின் தனித்­துவம், இருப்பு, அவர்­களின் உரி­மைகள் என அனைத்து விட­யங்­க­ளிலும் சம உரிமை வழங்­கப்­ப­டு­வதும், அவர்­க­ளது நிலங்கள் பாது­காக்­கப்­ப­டு­வதும் உறுதிப் படுத்­தப்­பட வேண்டும்.

ஆனால் தமிழ் முஸ்லிம் மக்­களின் இந்த நிலை­பாட்டில் பெரும்­பான்மை அர­சியல் தலை­மை­களின் தலை­யீ­டு­களும், அவர்­க­ளது மத்­தி­யஸ்­தமும் ஏற்­பட்டு வரு­கின்­றது. தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைக்­கான இவர்கள் தலை­யி­டு­வது முழு­மை­யான அர­சியல் சுய­ந­லத்­துக்­காக மட்­டு­மே­யாகும். அதை நம்பி எமது தலை­மைகள் ஏமாந்­து­போ­வதே சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே தமிழ், முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தலை­மை­களும், முஸ்லிம் தலை­மை­களும் இணைக்­கப்­பட வேண்டும்.

வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைத்து தமிழர் தாய­கத்தை உரு­வாக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தயா­ராக இருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். தமிழர் தாய­கத்தை உரு­வாக்கும் வகையில் தமிழ் தலை­மை­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த முஸ்லிம் தலை­மைகள் தயா­ரா­கவே உள்­ளது. தமிழ் மக்­களை முழு­மை­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய தமிழ் கட்­சி­களும், முஸ்லிம் மக்­களை முழு­மை­யாக பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முக்­கிய முஸ்லிம் கட்­சி­களும் இணைந்து பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக வேண்டும். நிரந்­தரத் தீர்­வொன்றை பெற்­றுக்­கொள்ளும் வகையில் பேச்­சு­வார்த்­தைக்கு செல்ல வேண்டும்.

அதேபோல் வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­னைத்து தமிழர் தாய­கத்தை உரு­வாக்­கு­வ­தென்­பது சாதா­ரண விடயம் அல்ல. தமிழ் முஸ்லிம் மக்கள் மத்­தியில் விட்­டுக்­கொ­டுப்­பையும் சுய உரிமைகளையும் பலப்படுத்துவதுடன் விட்டுக்கொடுப்பு அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ், முஸ்லிம் அரசியல் நடவடிக்கைகளை சமமாக அனுபவிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் அதுவே சாதகமான தீர்வை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply