தனியார்துறை ஊழியர்கள் வாக்களிப்பதற்கு தேவையான விடுமுறையை வழங்கவும் :மஹிந்த தேசப்­பி­ரிய

எதிர்­வரும் 17ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் ஊழியர்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு தனியார் துறை­யி­னர் தேவை­யான விடு­மு­றையை வழங்­கு­மாறு தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய கோரிக்கை விடுத்­துள்ளார். தேர்தல்கள் திணைக்­க­ளத்­தினால் விடுக்­கப்­பட்­டுள்ள விசேட ஊடக அறிக்கை ஒன்­றி­லேயே தேர்தல்­கள் ஆணை­யாளர் மேற்­கண்­ட­வாறு தெரிவித்­துள்ளார்.

பொது தேர்தல் ஒன்­றுக்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் மும்­மு­ர­மாக இடம்பெற்று வரும் நிலையில் வாக்­க­ளிப்­பா­னது எமது நாடடில் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதி பெற்­றுள்ள அனை­வ­ரி­னதும் கடமை அந்த வகையில் இம்­முறை நாட­ளா­விய ரீதியில் தொழில் நிமித்­த­மாக வெவ்­வேறு நகர பிர­தே­சங்­களில் பணி­பு­ரியும் ஊழி­யர்கள் தமது வாக்­கினை உறு­தி­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை தேர்தல்கள் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.

கடந்­த ­கா­லங்­களில் எமது நாட்டில் நடை­பெற்று முடிந்த தேர்தல்­களை விடவும் இம்­முறை நடை­பெறும் தேர்தலில் மக்கள் தேர்தல் சட்­ட­திட்­டத்தின் அடிப்­ப­டையில் அதி­க­ள­வான வாக்குப் பதி­வினை மேற்­கொள்ள வைப்­பதே எமது நோக்கம்.

அந்­த­வ­கையில் இம்­முறை நாட­ளா­விய ரீதியில் தனியார் துறை­களில் பணி­பு­ரியும் ஊழி­யர்கள் தேர்தல் தின­த்தன்று அவர்கள் பணி­பு­ரியும் இடத்தில் இருந்து 40 கிலோ மீற்றர் அல்­லது அதற்கு குறை­வான தூரத்தில் வாக்­க­ளிப்பு நிலையம் காணப்­ப­டு­மாயின் அரைநாள் விடுமுறை வழங்க வேண்­டும்.

இதே­வேளை 40 கிலோ­மீற்றர் முதல் 100 கிலோ­மீற்றர் வரை­யான தூரத்தில் வாக்­க­ளிப்பு நிலையம் காணப்­ப­டு­மாயின் வாக்­கா­ள­ருக்கு ஒரு நாள் விடு­முறை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

மேலும் வாக்­காளர் பணி­பு­ரியும் இடத்­தி­லி­ருந்து 100 கிலோ­மீற்றர் தொடக்கம் 150 கிலோ­மீற்றர் தூரத்தில் வாக்­க­ளிப்பு நிலையம் காணப்­ப­டு­மாயின் ஒன்­றரை நாள் விடு­மு­றையும் 150 கிலோ­மீற்ற­ருக்கும் அதி­க­மான தூரத்தில் வாக்­க­ளிப்பு நிலையம் காணப்­ப­டு­மாயின் இரண்டு நாள் விடு­முறை வழங்க வேண்­டு­மென தேர்­தல்கள் செய­லகம் தனி­யார்­ து­றை­யி­ன­ருக்கு அறி­வித்­துள்­ளது.

இத­னி­டையே நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள தனி­யார்த்­துறை வாக்­கா­ளர்கள் தங்களின் வாக்குகளை பதிவுசெய்வதற்கு மூன்று நாள் கால அவகாசம் தேவைப்படுமாயின் அதனை வழங்கவேண்டுமெனவும் தேர்த ல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அவ்வறிக்கையில் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply