காணாமற்போனோரின் உறவினர்கள் நல்லூரில் போராட்டம்!
வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்களை கண்டறிந்து தருமாறுகோரி நேற்று நல்லூர் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நேற்று குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே, நல்லூர் கந்தனே எனது அப்பாவை மீட்டுத் தருவாயா?, தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம், எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா? போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply