எமது வெற்றி நிச்­சயம்; ஐ.தே.கட்­சியின் வியூகம் தோல்வி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அதி­கா­ரங்­களை கைப்­பற்­று­வ­தற்கே ரணில் விக்­கி­ர­ம­சிங்க முயற்­சித்தார். இதனை நாம் தடுத்து நிறுத்­தினோம் எனத் தெரி­வித்­துள்ள அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க. நூறு நாளுக்கு அர­சுக்கு ஆத­ரவு வழங்­கி­யது. தேர்­தலை பின்­போட்டுக் கொள்­வ­த ற்கே ஆகும் என்றும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார். கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கண்­டியில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற் றும் போதே, அமைச்­சரும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் கண்டி மாவட்­டத்தில் போட்­டி­யிடும் வேட்­பா­ள­ரு­மான எஸ்.பி.திஸா­நா­யக்க இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்றும் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன வின் அதி­கா­ரங்­களை பறித்து அவை­ய­னைத் ­தையும் ரணில் கையி­லெ­டுத்து ஜனா­தி­ப­தியை இந் நாட்டின் கோபல்லவாவாக மாற்ற முயற்­சித்தார்.

இதனை நாம் தடு த்து நிறுத்­தினோம். ஜனா­தி­ப­தியை எமது தலை­வரை பாது­காத் தோம். நிதி­ய­மைச்சின் கீழ் இருக்க வேண்­டிய மத்­திய வங்­கியின் நிர்­வாகம் ரணி­லுக்கு கீழே கொண்டு வரப்­பட்­டது. இதன் மூலம் பாரிய பிணை முறி மோசடி மேற்­கொள்­ளப்­பட்­டது.

எமது கட்சி பிள­வு­பட்டு சீர­ழிந்து தேர்­தலில் மாபெரும் தோல்­வியை பெறும் என ஐ.தே.கட்சி கனவு கண்­டது. மஹிந்­த­வை­யும் – மைத்­தி­ரி­யையும் பிரிக்க சதி செய்­தது. ஆனால் ஐ.தே.கட்­சியின் முயற்சி வெற்­றி­பெ­ற­வில்லை.

இன்று எமது கட்சி ஒன்­று­பட்­டுள்­ளது. மஹிந்­தவும் மைத்­தி­ரியும் இணைந்­துள்ள னர். ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் தோல்வி கண்டோம். எனவே அத்­தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் நாம் தேர்­த­லுக்கு சென்றால் வெற்றி பெற முடி­யாது என்­பதை தெரிந்து கொண்டோம்.

இந்த நிலையில் ஜனா­தி­பதி எமக்கு அழைப்­பு­வி­டுத்தார். அர­சுடன் இணை­யு­மாறு தேர்­தலை ஒத்­தி­வைப்­ப­தற்கு காலம் தாழ்த்­து­வ­தற்கு ஒரே மாற்று வழி இது என்­பதை புரிந்து கொண்டு 100 நாள் ஆட்­சிக்கு ஆத­ரவு வழங்­கினோம்.

இந்த வியூகம் இன்று வெற்றி பெற்­றுள்­ளது. எமது கட்சி ஒன்­று­பட்டு தேர்­த­லுக்கு முகம் கொடுக்­கின்­றது. எமது கிரா­மங்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக கிடைத்த நிதி கள் எமக்கு கிடைப்­ப­தில்லை.

ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்­திகள் நின்று போய்­விட்­டன. இதனால் மக்கள் மீண்டும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யுடன் இணைகின்றனர்.இன்று தேர்தலில் வெற்றி பெறும் எந்த விதமான சாதகத் தன்மையும் ஐ.தே.கட்சி க்கு இல்லை. எனவே எமது வெற்றி நிச்ச யம் என்றும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாய க்க தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply