பேரறிவாளன், முருகன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும்: கருணாநிதி

பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு, அளித்த தீர்ப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றி உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு சரியானது என்று தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்,

ராஜீவ்காந்தி கொலையை நாம் யாரும் நியாயப்படுத்துகிறவர்கள் அல்ல. பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென்று பல முறை அறிக்கை விடுத்தவன் நான் என்ற முறையில், இதற்கு பிறகும் தாமதிக்காமல், தமிழக அரசு உடனடியாக சரியான சட்ட அணுகுமுறைகளை மேற்கொண்டு இவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply