உதயன் சுடரொளி பத்திரிகைகளின் ஆசிரியர் வித்யாதரனின் தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது
இலங்கையில் கடந்த மாதம் போலிஸாரால் தடுத்துவைக்கப்பட்ட சுடரொளி மற்றும் உதயன் பத்திரிகைகளின் ஆசிரியர் வித்யாதரன், இன்று கொழும்பு நீதிமன்றம் ஒன்றில் கொண்டுவரப்பட்டார். அவரது தடுப்புக்காவல் நீடிக்கப்பட்டிருக்கிறது.
போலிசார், கொழும்பில் விடுதலைப்புலிகள் சமீபத்தில் நடத்திய விமானத்தாக்குதல் தினத்தன்று வித்யாதரனுக்கு விடுதலைப்புலிகளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு குறித்தே அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருப்பதாகக் கூறினார் சரவணபவன். ஆனால் இது குறித்து முழுவிவரங்கள் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் சரவணபவன் மேலும் தெரிவித்தார்.
வித்யாதரன் கொழும்பு போலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரை சந்திக்க அவரது மனைவிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறும் சரவணபவன், இன்று காலை கூட வித்யாதரனை அவரது மனைவி சென்று பார்த்துவந்ததாகவும், அப்போது அவருக்கேகூட வித்யாதரன் நீதிமன்றத்தில் இன்று கொண்டுவரப்படுகிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் சரவணபவன் தெரிவித்தார்.
சாதாரணமாக குற்றவியல் பிரிவு போலிசார் மற்ற கைதிகளை நடத்துவது போல வித்யாதரனை நடத்தவில்லை என்று கூறிய சரவணபவன், வித்யாதரனுக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன, இவர் செல்லில் போடப்படவில்லை என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply