கனடாவில் புலிக்கொடி ஏந்திய மனித சங்கிலிப் போராட்டம் பொலிசாரின் விசாரணைகள் ஆரம்பம்
கனடாவில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிகள் ஏந்தப்பட்டமை தொடர்பில் கனடிய பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடாவில் தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பாகும.; அப்படியிருந்தும் அங்கு வாழும் சுமார் 50,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கடந்த திங்களன்று நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டத்தின் போது புலிக்கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட நிலையில் புலிக்கொடி ஏந்தப்பட்டமை சட்டத்துக்கு விரோதமானது எனத் தெரிவித்த பொலிசார், இது தொடர்பான விசாரணைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
2006 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply