சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி தமிழீழத்தை ஏற்படுத்தும் திட்டத்தை ஐ.தே.க. முன்னெடுக்கிறது
சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கி சர்வதேச அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து தமிழீழத்தை ஏற்படுத்தும் திட்டத்தை ஐ.தே. கட்சி முன்னெடுப்பதாக குற்றம் சாட்டிய உதய கம்மன்பில எம்.பி. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இல்லாதொழிக்கும் ‘‘சதி” யின் ஒரு அங்கமே ஐ.தே. கட்சியின் தேசிய அரசுப் பொறியாகும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ‘‘மஹிந்த” அணி ஆதரவாளர்களின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;
1988 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கையை ஆக்கிரமித்தது. 2004 ஆம் ஆண்டில் ‘‘சுனாமி” பேரலையால் நாடும் மக்களும் நெருக்கடிக்குள்ளானார்கள். 2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ புலிகளை ஒழிக்கும் யுத் தத்தை ஆரம்பித்தார். இதன் போதேல் லாம் தேசிய அரசு தேவை, நாங்கள் இணைந்து செயற்படுவோம் என ஐ.தே. கட்சி கூறவில்லை.
ஆனால் இன்று எந்தவிதமான அவசரத் தேவையும் இல்லாத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐ.தே. கட்சி தேசிய அரசு அமைக்கவுள்ளது. இதன் மூலம் சுதந்திரக் கட்சி மீதான மக்கள் நம்பிக்கையை சிதைத்து அக் கட்சியை அடுத்த தேர்தலுக்கு முன்னர் இல்லாதொழிக்கும் ஐ.தே. கட்சியின் சதித் திட்டமே இதுவாகும். அத்தோடு இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கவும், அதன் மூலம் சர்வதேச நாடுகளில் சம்பந்தனுக்கு ராஜ தந்திர அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நேரடியாக நடத்தும் சந்தர்ப்பத்தை ஐ.தே. கட்சி ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.
இவ்வாறானதோர் சூழ்நிலையில் தனித் தமிழீ ழத்துக்கு மேற்குலக நாடு களின் ஆதரவை சம்பந்தன் பெற்றுக் கொள்வார். இதுவே மேற்குலகினதும் ஐ.தே.க. வினதும் நிகழ்ச்சி நிரலாகும். இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கலைக்கப்படப் போவதாகவும் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.
இம்முன்னணியில் 95 எம்.பி. க்கள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளனர். எனவே கலைப்பது இலகுவான காரியமல்ல. ஆனால் இன்று இம் முன்னணியை செயலிழக்கச் செய்வ தற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படு கின்றன என்றும் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply