எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்க தயார் : குமார் வெல்கம
புதிய நாடாளுமன்றத்திற்கான எதிர்கட்சித் தலைவர் குறித்து இன்னும் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை எதிர்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், எதிர்கட்சித் தலைவர் பதவியை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply