இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜிசாட்-6 செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தகவல் தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காகவும், ‘எஸ்.பேண்ட்’ தொலைத்தொடர்புக்கு பயன்படும் வகையிலும் ‘ஜிசாட்-6’ என்ற செயற்கைக் கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி-டி 6 ராக்கெட்டை விண்ணில் ஏவப்படுவதற்கு முன்பாக ‘கவுண்ட் டவுன்’ என்று அழைக்கப்படுகிற இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகள் (29 மணி நேர ‘கவுண்ட் டவுன்’) நேற்று (புதன்கிழமை) காலை 11.52 மணிக்கு தொடங்கியது. இந்த கவுண்ட் டவுன் முடிந்து திட்டமிட்டப்படி ‘ஜி.எஸ்.எல்.வி டி6’ ராக்கெட் இன்று மாலை 4.52 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ராக்கெட் ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் 49 மீட்டர் உயரமும் 416 டன் எடையும் கொண்டதாகும்.
விண்ணில் ஏவப்பட்ட 18-வது நிமிடத்தில் செயற்கை கோளானது, தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மேலும் ஒரு வியத்தகு சாதனையை படைத்துள்ளனர் என்று மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply