சட்ட மேதை அம்பேத்கர் லண்டனில் தங்கியிருந்த காலத்தில், வசித்த வீட்டை, மகாராஷ்ட்ரா அரசு, விலைக்கு வாங்கியுள்ளது

லண்டனில் ஆராய்ச்சி படிப்பு படித்த போது, சட்ட மேதை அம்பேத்கர், கிங் ஹென்றி சாலையில் இருந்த ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்த வீட்டின் ambedkars-house-in-loondon_1உரிமையாளர், கடந்த ஆண்டு அதனை விற்பனைக்கு கொண்டு வந்தார். இதையறிந்த மகாராஷ்டிர அரசு, அந்த வீட்டை விலைக்கு வாங்க முடிவு செய்தது. 31 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கப் போவதாக, கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. ஆனால், பல்வேறு நடைமுறை பிரச்னைகளால், இந்த விற்பனை முடிவுக்கு வராமல் தாமதம் ஆனது. 

 

இந்நிலையில், இழுபறி முடிவடைந்து, மகாராஷ்டிர மாநில அரசு நேற்று அந்த வீட்டை விலைக்கு வாங்கியது. ஆனால், என்ன விலைக்கு அந்த வீடு வாங்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அம்பேத்கர் வசித்த வீடு, சர்வதேச நினைவகமாக மாற்றப்படும் என்றும், கல்வி மற்றும் கலாசார மையமாக திகழும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply