அமெரிக்க அரசின் இனத் துரோகத்தைக் எதிர்த்து, சென்னை அமெரிக்க தூதரகம் முற்றுகை

அமெரிக்க அரசின் தமிழ் இனத் துரோகத்தைக் கண்டித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், செப்டம்பர் 1 ஆம் தேதி அன்று vaikoசெவ்வாய் கிழமை காலை 10 மணி அளவில்,சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதராலயத்துக்கு எதிரே என்னுடைய தலைமையில் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கழகக் கண்மணிகளும், ஈழத் தமிழ் உணர்வாளர்களும் ஆர்ப்பரித்து அறப்போரில் பங்கேற்க அன்புடன் வேண்டுகிறேன் என அந்த கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் அவர் அந்த அழைப்பிதழில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அரசின் மன்னிக்க முடியாத துரோகம் யாதெனில், நடந்து முடிந்த தமிழ் இனப் படுகொலையை முழுமையாக மறைத்து, போர்க்குற்ற விசாரணையை கொலைகார அரசிடமே ஒப்படைக்க முடிவு செய்ததை, தற்போது இலங்கைக்கு வந்துள்ள தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைத் துணைச் செயலாளர் நிசா பிஷ்வால் எனும் பெண்மணி தெரிவித்து உள்ளார். மேலும் அவர் இலங்கை கொலைகார அரசின் ஆலோசனையின்படிதான் ஜெனிவா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானத்தைத் தாக்கல் செய்வோம் என்றும் கூறி விட்டார்.

எனவே, ஈழத்தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான தாய்த் தமிழகத்துத் தமிழர்கள், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள், அமெரிக்க – இலங்கை சதித் திட்டத்தை முறியடிக்கவும், ஈழத் தமிழ் இனத்தைப் பாதுகாக்கவும் வீறுகொண்டு எழவேண்டிய நேரம் வந்துவிட்டது. அர்ப்பணிக்கும் வேளை வந்துவிட்டது. உத்தமத் தியாகி முத்துக்குமாரின் மேனியைப் பற்றி எரித்த நெருப்புத் தழலை நெஞ்சில் ஏந்திக் களம் காண்போம் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply