மூன்றாவது இடத்திலுள்ள எமக்கே எதிர்க்கட்சி தலைமை – த.தே.கூ

இலங்கையின் புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமக்கே தரப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சிtna1 ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்சியினால் இன்று (29) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, இரண்டாவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை ஏற்றுகொண்டுள்ளது. இதன்படி இருகட்சிகளும் அமைச்சரவையில் கூட்டாக பொறுப்புக்களை ஏற்குமாயின், அதற்கு அடுத்த இடத்தில் 16 ஆசனங்களுடன் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியான எமக்கே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதன் முழு அறிக்கை வருமாறு:

 

 

 

கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகளவான பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதற்கு அடுத்த அதிக ஆசனங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

 

 

இந்நிலையில் இரு கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கி அமைச்சுப் பதவிகளை ஏற்றுகொண்டுள்ளது. அதன்படி ஐ.தே.க மற்றும் ஐ.ம.சுமு. ஆகியன அமைச்சரவைக்கு பொறுப்பு வகிக்கும். பாராளுமன்றத்திலுள்ள கட்சிகள் என்ற ரீதியில் அவ்விரு கட்சிகளும் அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளுக்கும்  அமைச்சரவையில் தங்களது ஆதரவைத் தெரிவிக்கும்.

 

 

 

இந்நிலை பாராளுமன்ற வாக்கெடுப்பிலும் இடம்பெறும். மேலும் எதிர்க்கட்சியில் அமரவுள்ள ஐ.ம.சு.முவினராலும் எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் ஐ.ம.சு.முவில் போட்யிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் தற்போது, ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்களே. மற்றும் ஐ.ம.சு.முவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தற்போதைய பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருப்பினும் அதில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.

 

 

 

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க) 16 ஆசனங்களை பெற்றுள்ளதன் படி பாராளுமன்றத்தின் எதிரணியிலுள்ள மிகப் பெரிய கட்சியாகும். பாராளுமன்றத்தின் சட்டதிட்டங்களுக்கு  அமைய இ.த.அ.கவை பிரதிநிதித்துவப்படுத்து தலைமைத்துவத்திற்கே எதிர்க்கட்சித் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும்.

 

 

 

ஜனாதிபதி சிறிசேன மற்றும் அரசாங்கம், இந்த நாட்டில் தமிழ் மக்களை சம உரிமையுள்ள குடிமகன்களாக அங்கீகரிப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியான எம்மை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்வதில் விருப்பமின்மையை காட்டுவதானது இந்த அர்ப்பணிப்பை மதிக்காத செயல் என பிரதிபலிக்கும். மேலும் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட கட்சியை பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்காத நிலை, ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரங்களை தருகின்ற ஒரு தீர்வை எட்டுவதில் தயாரில்லை என்பதேயே சுட்டிக்காட்டும்.

 

 

 

இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில், இந்த நாட்டு மக்களால் இந்நாட்டை முன்னேக்கிச் செல்வதற்கான வழியையும் வாய்ப்பையும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வீணாக்க வேண்டாம் என நாங்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவர்கள் தேசிய பிரச்சினையை தீர்ப்பதில் உறுதியோடு இருப்பார்களேயாயின், இவ்விடயத்தில் அது பிரதிபலிக்கும். இதில் எங்கள் பங்காக, இலங்கையின் தேசிய பிரச்சினையை தீர்க்க அரசுடன் இணைந்து ஆக்கபூர்வமாக பாடுபடுவோம்.

 

 

 

இலங்கையில் தமிழரசுக் கடசி (இ.த.அ.க.)

 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் (த.தே.கூ.)

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply