ஒடிசாவில் பச்சிளங்குழந்தைகள் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

orisad449047df5_S_secvpfஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகளில் மேலும் 5 பேர் பலியானதால், இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் குழுவுடன் இணைந்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று அம்மருத்துவமனையை பார்வையிட்டார். போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வசதி இல்லாததே குழந்தைகள் இறக்கக் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும் மந்திரி சென்ற பிறகு இணை செயலாளர் தலைமையில் நான்கு உறுப்பினர் மத்திய குழு மருத்துவமனையை ஆய்வு செய்தது.

 

மேலும், மருத்துவமனையின் நிலைமையை மேம்படுத்த மாநில அரசுடன் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக மத்திய குழு தெரிவித்தது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply