நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சிறப்புரிமைகள்

parliment_mainநாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 54 ஆயிரத்து 525 ரூபாவாகும். அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65 ஆயிரம் ரூபாவாகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் கொடுப்பனவுகள்.

அடிப்படைச் சம்பளம் – 54,525
போக்குவரத்து கொடுப்பனவு௰,000
உபசரிப்பு கொடுப்பனவு ௧,000
செல்போன் கொடுப்பனவு – 2,000
நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் கொடுப்பனவு(ஒரு கூட்டத்திற்கு)- 500
அமைச்சர்களுக்கான கொடுப்பனவு
மாதச் சம்பளம் 65,000
பிரதியமைச்சரின் மாதச் சம்பளம்௬3,500

அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுப்படும்.

கொழும்பு மாவட்டத்திற்கு 18,845 ரூபா, களுத்துறை மாவட்டத்திற்கு 23,600 ரூபா, இரத்தினபுரி, காலி, கண்டி, குருணாகல் மாவட்டங்களுக்கு 28,300 ரூபா, மாத்தளை, புத்தளம், மாத்தறை, நுவரெலியா மாவட்டங்களுக்கு 32,990 ரூபா, பொலன்நறுவை, பதுளை, அம்பாந்தோட்டை, வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை, அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு 37,745 ரூபா என எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும்.

இதனை தவிர நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிரந்திர தொலைபேசிகள் வழங்கப்படும். இதன் கட்டணங்களை நாடாளுமன்றமே செலுத்தும்.

மாதிவல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்பில் வீடொன்றும் வழங்கப்படும். இதனை தவிர தொடர்ந்தும் 5 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தால், அவர்களுக்கு ஓய்வூதியமும் வழங்கப்படும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply