முதலாவது சம்பிரதாய பூர்வ அமர்வு இன்று ஆரம்பம்

எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது சம்பிரதாயபூர்வ அமர்வு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கோலாகலமாக parliment_mainஇடம்பெறுகிறது. சம்பிரதாயபூர்வ அமர்விற்கு முன்ன தாக சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுக்காக பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்குக் கூடுவதாக பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நில் இத்தகவலை தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று காலை கூடியதும் முதல் நிகழ்வாக சபாநாயகர் தெரிவு இடம்பெற இருப்பதோடு புதிய சபாநாயகராக கரு ஜயசூரியவின் பெயர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட இருக்கிறது.

 

எதிர்த்தரப்பின் ஆதரவுடன் புதிய சபாநாயகராக கரு ஜயசூரிய நியமிக்கப் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் முன்னிலையில் பதவிபெற்ற பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவுகள் இடம்பெற இருப்பதாக பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவல தெரிவித்தார்.

 

பிரதி சபாநாயகராக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட உள்ள அதேவேளை குழுக்களின் பிரதித் தலைவராக சிறு பான்மை கட்சி எம்.பி. ஒருவர் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்பட இருக்கிறார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்தும் இதன் போது அறிவிக்கப்பட இருக்கிறது. இதனை தொடர்ந்து சகல எம்.பிக்களும் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

 

முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவை தொடர்ந்து புதிதாக தெரிவான சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோருக்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவிக்கும் நிகழ்வு அடுத்து இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

 

காலை நேர அமர்வின் போது, தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அறிய வருகிறது.

 

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்படும். சம்பிரதாயபூர்வ அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிற்பகல் 2.20 மணியளவில் பாராளுமன்றத்திற்கு வருகை தர ஏற்பாடாகியுள்ளது.

 

பாராளுமன்ற நுழைவாயிலில் இருந்து பாராளுமன்ற கட்டடத் தொகுதிவரை ஜனாதிபதி வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட இருக்கிறார்.

 

ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை வேட்டு தீர்க்கப்பட உள்ளதோடு பாராளுமன்ற வீதியின் இரு பக்கமும் படையினர் நின்று ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்த ஏற்பாடாகியுள்ளது.

 

பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதியை பிரதமர், புதிய சபாநாயகர் உட்பட பாராளுமன்ற உயரதிகாரிகள் வரவேற்று அழைத்து வர உள்ளனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதியினால் தேசிய கொடியேற்றி வைக்கப்படும்.

 

காலை நேர பாராளுமன்ற அமர்வின் போது பிரதமர், அண்மையில் பதவி ஏற்ற மூன்று அமைச்சர்கள், ஆகியோருக்கே ஆசனங்கள் ஒதுக்கப்பட உள்ளதோடு ஏனைய எம்.பி.களுக்கு ஆளும் தரப்பிலும் எதிர்தரப்பிலும் விரும்பிய ஆசனத்தில் அமர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

ஆனால் பிற்பகல் உத்தியோகபூர்வ அமர்வின் போது ஆசன வரிசையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

 

8ஆவது பாராளுமன்றத்தின் உத்தியோக பூர்வ அமர்வு பிற்பகல் 3.00 மணிக்கு புதிய சபாநாயகரின் தலைமையில் கூடுகிறது. இதன் போது ஜனாதிபதியின்கொள்கை பிரகடன உரை இடம்பெறும்.

 

ஜனாதிபதியின் உரையையடுத்து பாராளுமன்றம் செப்டம்பர் 3ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட இருப்பதாக பாராளு மன்ற பிரதி செயலாளர் நாயகம் குறிப் பிட்டார்.

 

இதனை தொடர்ந்து விருந்துபசாரம் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

 

இதேவேளை, தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக பாராளுமன்ற அனுமதியை பெறுவதற்காக பாராளுமன்றம் மீண்டும் நாளை மறுதினம் கூடுகிறது. இது தொடர்பில் விவாதம் நடத்த வேண்டுமென ஜே.வி.பி. கோரியிருந்ததோடு ஒரு நாள் விவாதத்தின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை மீது வாக்கெடுப்பு இடம்பெறும்.

 

சாதாரண பெரும்பான்மையுடன் இந்த பிரேரணையை நிறைவேற்ற முடியும் என்றும் பிரதி பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசனாயக்க தெரிவித்தார். இதே நேரம் ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் தெரிவான புதிய பாராளுமன்றம் 8ஆவது பாராளுமன்றம் என தெரிவிக் கப்படுவது குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமையவே இம்முறை தெரிவான பாராளுமன்றம் 8ஆவது பாராளுமன்றமாக அழைக்கப் படுவதாக கூறினார்.

 

1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட பாராளுமன்றம் முதலாவது பாராளுமன்றமாக அழைக் கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply