கிரேக்கத்தில் நேற்று 4200 குடியேறிகள் வந்தடைந்தனர்

refugiகிரேக்கத்துக்கு அதிக எண்ணிக்கையில் குடியேறிகள் வந்து குவிவதை தடுப்பதற்கான வழிகள் குறித்து அந்த நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவரும் நிலையில், மேலும் ஆயிரக்கணக்கானோர் கிரேக்க பெருநிலப்பரப்பில் வந்து இறங்கியிருக்கிறார்கள்.லெஸ்போஸ் தீவில் இருந்து புறப்பட்டு, கடந்த இரவு 4,200 பேர், இரு கப்பல்களில் பிராயஸ் துறைமுகத்தை வந்தடைந்திருக்கிறார்கள்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் குடியேறிகள் வந்து குவிவதால் ஐரோப்பா பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஊடாக பயணிப்பதற்கு போலிஸார் தடுத்ததை அடுத்து, பெரும்பாலும் மத்திய கிழக்கில் இருந்துவந்த நூற்றுக்கணக்கானவர்கள், ஹங்கேரியில் ஒரு ரயில் நிலையத்தில் வழியின்றி தவிக்கிறார்கள்.

கடந்த வாரத்தில் மாத்திரம் கிரேக்கத்துக்கு 23,000 பேர் வந்தடைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பான ஃபுரெண்டெக்ஸ் கூறுகிறது.

இந்த வருடத்தில் ஒரு லட்சத்து அறுபதினாயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை வந்தடைந்திருக்கிறார்கள். இது கடந்த வருடத்தில் வந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை ஏற்கனவே தாண்டிவிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply