ஒரு நாள் ஆசிரியர் – டெல்லி மாணவர்களுக்கு இன்று பாடம் எடுக்கும் ஜனாதிபதி
முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை கொண்டாடும் விதமாக இந்திய ஜனாதிபதி ஒரு நாள் மட்டும் ஆசிரியராக பணியாற்ற முடிவு செய்துள்ளார். இந்த யோசனையானது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகியோரால் முன்மொழியப்பட்டது. இது பிடித்திருந்ததால் ஜனாதிபதியும் தனது ஒப்புதலை வழங்கினார்.
இதன்படி இன்று (செப்டம்பர் 4-ம் தேதி) ஆசிரியர் தினத்திற்கு முதல் நாள் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் சர்வோதயா வித்யாலயா பள்ளியின் 11 மற்றும் 12-வது வகுப்பை சேர்ந்த 100 மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளார். மேலும் சுமார் 100 ஆசிரியர்கள் மத்தியிலும் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துக்கொள்வார்.
முதல் முறையாக பிரணாப் முகர்ஜி மாணவர்களுக்கு பாடம் எடுக்க உள்ளார். ஜனாதிபதியாக இருந்த டாக்டர். அப்துல் கலாம், மாணவர்களை சந்தித்து உரையாடுவதை தன்னுடைய முக்கிய கடமையாகவே வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply