‘ஒபரேஷன் வணங்கா மண்’ இலங்கையின் எதிர்ப்பையும் மீறி முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழையும் : பிரித்தானிய தமிழ் அமைப்பு
வன்னியில் உள்ள பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் கொண்டு வரும் போர்வையில் பிரித்தானியாவில் இருந்து புலிகளின் ‘வணங்கா மண்’ என்ற கப்பல் இலங்கைக்கு வரவுள்ளமை குறித்து நேற்று தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். பிரித்தானிய தமிழ் அமைப்பு ஒன்றினால் 2,000 மெற்றித் தொன் உணவுப் பொருட்கள் இந்த கப்பலில் கொண்டு வரப்பட உள்ளதாகவும் இந்த தமிழ் அமைப்பு புலிகளின் வலையமைப்புடன் சம்பந்தப்பட்டது எனவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த கப்பல் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொடியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது எனவும் பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. ஒபரேஷன் வணங்கா மண் என்ற இந்த கப்பல் பிரித்தானியாவில் இருந்து புறப்பட்டு, இலங்கையின் எதிர்ப்பையும் மீறி, முல்லைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழையும் என பிரித்தானிய தமிழ் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய முற்பட்டால், அதன் மீது தாக்குதல் நடத்தப்படும் என சிரேஷ்ட கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கப்பலை அழிக்கும் உரிமையும் தமக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த வணங்கா மண் கப்பலின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்து கடற்படையினர் லண்டனில் உள்ள சர்வதேச லொயிட் நிறுவனத்திடம் விசாரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply