உள்கட்சி ஓட்டெடுப்பு: ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பதவி விலகுகிறார்?

26f1402db96_S_secvpfஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவரது அரசு மீது அதிருப்தி நிலவி வருகிறது. கருத்து கணிப்பு முடிவுகளும் அவருக்கு எதிராகவே உள்ளன. பொருளாதார ரீதியாக நாட்டை அவர் முன்னேற்ற தவறி விட்டதாக, அவரது அரசில் உள்ள மூத்த மந்திரி மால்கம் டர்ன்புல் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதையடுத்து, இருவரில் யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறிய உள்கட்சி ஓட்டெடுப்பு நடைபெற்றது. அதில், டோனி அபோட்டுக்கு ஆதரவாக 44 ஓட்டுகளும், டர்ன்புல்லுக்கு ஆதரவாக 54 ஓட்டுகளும் கிடைத்தன. இதனால், பிரதமர் பதவியை அபோட் விரைவில் ராஜினாமா செய்கிறார். அதைத்தொடர்ந்து, மால்கம் டர்ன்புல், நாட்டின் 29-வது பிரதமராக பதவி ஏற்பார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply