இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றிய உண்மை கண்டறியும் கமிஷனை ஏற்க தமிழர்கள் மறுப்பு
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், அப்பாவி தமிழர்கள் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக ஒரு உண்மை கண்டறியும் கமிஷனை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக ஜெனீவாவில் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமை கமிஷன் கூட்டத்தில் நேற்று இலங்கை வெளியுறவு மந்திரி மங்கள சமரவீரா கூறியிருந்தார்.
ஆனால், இதனை ஏற்க இலங்கை தமிழர் அமைப்புகள் மறுத்துள்ளன.
இதுதொடர்பாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறுகையில், ‘‘இலங்கை அரசின் இந்த திட்டங்கள் போதாது. இந்த போர்க்குற்றம் பற்றி முறையான விசாரணை நடைபெறவில்லை. அதனாலேயே நாங்கள் சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை கேட்கிறோம்’‘ என்றார்.
இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றிய உண்மை கண்டறியும் கமிஷனை ஏற்க மாட்டோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் மறுப்பு தெரிவித்துள்ளார். சர்வதேச விசாரணையும், தமிழர்களுக்கு அரசியல் அதிகாரமும் தேவை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply