சீனாவின் எதிர்ப்பால் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படவில்லை

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் தொடர்பாக விவாதிப்பதற்கு சீனா எதிர்ப்பு தெரிவிப்பதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கே மோதல்கள் காரணமாக பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு சபையில் விவாதிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.

எனினும் சீனா ‘இது இலங்கையின் உள்விவகரம்’ எனவும் ‘இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை’ எனவும் தெரிவித்து பாதுகாப்பு சபையில் இலங்கை விடயம் கலந்துரையாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

அதேநேரம், புலிகளின் அரசியற்துறை பொறுப்பாளர் ப. நடேசன் இலங்கை விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச்சபையில் விவாதிக்க சீனா, ரசியா போன்ற நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply