இந்திய எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் 4 முறை தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி இந்திய எல்லையில் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் மீதும் எல்லையோர கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய் கிழமை இரவு முதல் இதுவரை பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு மாவட்டத்தின் எல்லையோர பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது நான்கு ஐந்து முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கனரக துப்பாக்கி சூடு மற்றும் பீரங்கித் ஷெல் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply