நாட்டை, படையினரை காட்டிக்கொடுக்கும் ஐ.நா அறிக்கையை நிராகரிக்கிறோம் : புலிகள் செய்த தவறுகளுக்கான பொறுப்பை புலிகள் சார்பில் சம்பந்தன் ஏற்பாரா?

viragumarஇலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை பேரவை விசாரணை அறிக்கையை நிராகரிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்தது. யுத்தத் திற்கு முடிவு கட்டிய முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் படை வீரர்களை குற்றவாளிக் கூட்டில் நிறுத்தவே இந்த அறிக்கையினூடாக முயற்சி செய்யப்பட்டிருப் பதாக தேசிய சுதந்திர முன்னணி பிரதி தலைவர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கை தொடர்பில் வினவிய தற்குப் பதிலளித்த அவர் படையினர், புலிகள் இரு தரப்பும் யுத்தக் குற்றம் புரிந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்ப ட்டுள்ளது. ஆனால் புலிகள் தரப்பில் இந்தக் குற்றச்சாட்டை ஏற்க எவரும் கிடையாது புலிகள் செய்த தவறுகளுக்கான பொறுப்பை புலிகள் சார்பில் இரா. சம்பந்தன் ஏற்பாரா? எனவே விசாரணை முடிவில் முன்னாள் ஜனாதிபதியும், முப்படைத் தளபதிகளும் படையினருமே தண்டிக்கப்படுவர்.

தாம் நியாயமான விசாரணை நடத்தப்போவதாக காண்பிப்பதற்காகவே இரு தரப்பும் பொது மக்களை கொலை செய்திருப்பதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஏற்க முடியாது சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்றத்தினூடாக விசாரணை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவும் சர்வதேச விசாரணையே. இதனை ஏற்கமுடியாது எமது கட்சி இதனை எதிர்க்கிறது என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply