என்னிடம் விசாரணை நடத்துங்கள் ஒத்துழைப்பேன் : சரத் பொன்சேகா!

2009.மே.18 இறுதிக்கட்ட போரின் போது சரணடைந்தவர்களை இலங்கை இராணுவம் கொலை செய்ததாக ஐ.நா. தொடர்ந்தும் குற்றச்சாட்டி வருகின்றது. sarathfonsekaஅவ்வாறான ஏதும் இடம்பெற்றிருக்குமாயின் விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பில் பேசியமையினாலேயே நான் சிறையில் அடைக்கப்பட்டேன். குற்றம் இழைத்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

 

நான் இராணுவத்தளபதியாக இருந்த போது எனக்குத் தெரியாமல் அவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருக்குமாயின், நான் அப்பதவியில் தொடர்ந்தும் இருந்திருப்பேனாயின் விசாரணைகளை முன்னெடுத்திருப்பேன். சித்திரவதை செய்தல், காணாமல் போதல், மக்கள் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தியமை, பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை தடுத்தல், பாதிகப்பட்ட மக்களை முகாம்களில் தடுத்து வைத்தல், அதில் சிலர் பாலியல் வண்கொடுமைகள் உள்ளானமை போன்ற குற்றச்சாட்டுக்களை இராணுவத்தின் மீது சுமத்துவதனை நான் நிராகரிக்கின்றேன்.

 

ஆனால், அவற்றுக்கான சாட்சியங்கள் இருக்குமாயின், அவை தொடர்பில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை இணங்கண்டு தண்டனைப் பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும். ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் உண்மை என எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசோ, அரசியல்வாதிகளோ அச்சமைடந்து புலம்பத்தேவையில்லை.

 

இது நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் ஒன்றல்ல. இலங்கை மீதுள்ள அபகீர்த்தியை சரிசெய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் இதனைப்பார்க்கலாம். நான் தொடர்ந்தும் இராணுவத் தளபதியாக இருந்திருந்தால் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகள் எமக்கு கீழ் இடம்பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு உச்சகட்ட தண்டனையைப் பெற்றுக் கொடுத்திருப்பேன்.

 

போர்க்குற்ற விசாரணைகள் என்னிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எந்தவிதமான அச்சமும் இன்றி பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன். நான் அறிந்த வகையில் இராணுவத்தில் அவ்வாறான ஏதும் இடம்பெறவில்லை. நான் அரியாது ஏதேனும் இடம்பெற்றிருக்குமாயின் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஸல் சரத் பொன்சேகா

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply