ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தொடர்பில் நன்கு ஆய்வு செய்த பின்னரே கருத்து வெளியிட முடியும் : மஹிந்த ராஜபக்ஷ

mahintha-390ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தொடர்பில் நன்கு ஆய்வு செய்த பின்னரே ஏதேனும் கருத்து வெளியிட முடியும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜா-எல பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதி சடங்கொன்றில் கலந்துகொண்டபோது, ஊடகவியலாளர்கள் ஜெனிவா அறிக்கை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எதிராக பலவிதமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன, என்றாலும் நான் ஆரம்பித்த திட்டங்களை தற்போதைய அரசாங்கம் திறந்து வைக்கின்றது அதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் ஒன்றை நிர்மாணிப்பது வெறுமனமே மூடி வைத்து விடுவதற்கல்ல, அதனை திறந்து வைத்து மக்களுக்கு பிரயோசனமாக முறையில் பயன்படுத்த வழங்க வேண்டும்.

அத்துடன் ஜெனிவா அறிக்கை தொடர்பில் நன்கு ஆய்வு செய்த பின்னர் நிச்சியமாக அது தொடர்பில் கருத்து வெளியிடுவேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply