ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விவகாரத்தில் இலங்கை வெற்றியீட்டியுள்ளது :ரணில்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையானது நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளக விசாரணைப் பொறிமுறைமை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையின் ஊடாக இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை அறிக்கையில் ஹைபிரைட் நீதிமன்றம் உருவாக்கப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஹைபிரைட் நீதிமன்றம் என்பது என்ன என்பது இன்னமும் சரியாக வரைவிலக்கப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நம்பகமான உள்ளக விசாரணைப் பொறிமுறைமைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply