பின்லேடன் மெய்க்காவலர் விடுதலை: அமெரிக்கா திடீர் நடவடிக்கை
அமெரிக்க தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மெய்க்காவலராக பணியாற்றியவர், அப்துல் ஷலாபி (வயது 39). அமெரிக்க தாக்குதலை தொடர்ந்து 2001-ம் ஆண்டு இந்த அப்துல் ஷலாபியை பாகிஸ்தான் பிடித்தது. அவர், கியூபாவில் உள்ள அமெரிக்காவின் குவாண்டனமோ வளைகுடா சிறைக்கு அனுப்பப்பட்டார். தன்னை சிறையில் அடைத்ததற்கு எதிராக அவர் நீண்ட காலம் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அவரை திடீரென அமெரிக்கா விடுதலை செய்து விட்டது. சவுதி அரேபியாவை சேர்ந்தவர் என கருதப்படுகிற அவர், அந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றி பரிசீலனை செய்த குழு ஒன்று, ஷலாபியை இன்னும் காவலில் வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை என கூறியதை அடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாக குவாண்டனமோ வளைகுடா சிறையை மூடி விடுவதாக உறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply