ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: சுஷ்மா, ஜான் கெர்ரி கூட்டறிக்கையில் அறிவிப்பு


87eb7340-58cc-4778-99e5-d86e8b017ee2_S_secvpfஇந்திய, அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் வருடாந்திர கூட்டம், வாஷிங்டனில் நடந்தது. இதில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் தொடர்பான முதல் உடன்படிக்கையில், சுஷ்மா சுவராஜூம், ஜான் கெர்ரியும் கையெழுத்திட்டனர்.

இந்த கூட்டம், இந்தியா, அமெரிக்கா இடையே ஆண்டு ஒன்றுக்கு 100 பில்லியன் டாலரில் இருந்து (சுமார் ரூ.6½ லட்சம் கோடி), 500 பில்லியன் டாலர் அளவுக்கு (சுமார் ரூ.32½ லட்சம் கோடி) அதிகரிக்க உதவி உள்ளது. அதாவது, இரு தரப்பு வர்த்தகம் 5 மடங்காக உயர்கிறது.

 

இந்த கூட்டத்துக்கு பின்னர் சுஷ்மா சுவராஜூம், ஜான் கெர்ரியும் கையெழுத்திட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

 

அதில், “இந்தியாவை நிரந்தர உறுப்பினர் ஆக்கி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்வதற்கு அமெரிக்கா தனது ஆதரவை மீண்டும் உறுதி செய்கிறது. ஐ.நா. சாசனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு சர்வதேச அளவில் அமைதியையும், பாதுகாப்பையும் பராமரிப்பதில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தொடர்ந்து வலுவான பங்கு ஆற்றி வருகிறது என்பதை உறுதி செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.

 

கூட்டறிக்கையில் இடம் பெற்றுள்ள பிற முக்கிய அம்சங்கள்:-

 

* தீவிரவாதத்தை அனைத்து வடிவத்திலும் எதிர்த்து நின்று போரிடுவதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுவது மீண்டும் உறுதி செய்யப்படுகிறது.

 

* அல்கொய்தா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது, தாவூது இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளிகள், ஹக்கானி நெட்வொர்க், பிற குழுக்கள் தெற்காசியாவின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்துகின்றன.

 

* மும்பை தாக்குதல் தீவிரவாதிகளை பாகிஸ்தான், நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

 

* பஞ்சாப்பில் குர்தாஸ்பூர், காஷ்மீரில் உதம்பூரில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

 

மேற்கண்டவை அதில் இடம்பெற்று இருந்தன.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply