அமெரிக்கா விரைந்தார் சுமந்திரன்
அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வெளி விவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பினருக்குமிடையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது ஐ.நா.வின் அறிக்கையிலும், குறித்த பிரேரணையிலும் மாற்றம் செய்யப்படவேண்டுமென அரசாங்கத்தால் கோரப்பட்டுள்ள சொற்றொடர்கள், புதிதாக இணைக்கப்படவுள்ள சொற்றொடர்கள் குறித்து அதீத கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதேநேரம் அரசாங்கத்தரப்பினர் உள்ளுர் விசாரணை உட்பட பல்வேறு கருத்துக்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வெ ளியிட்டு வருகின்றனர். அமெரிக்காவின் உத்தேச முதல் வரைபினையும் பகிரங்கமாகவே நிராகரித்ததுடன் ஐ.நா அறிக்கை சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணயாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் என்ற சிபார்சு உள்ளிட்ட பல சொற்றொடர்களை மாற்றியமைக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே மேற்குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவாவுக்குச் சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் இக்கலந்துரையாடலுக்காக அங்கிருந்து நியூயோர்க்கிற்குச் விரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply