இந்தோனேஷியாவில் 6.9 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

erthஇந்தோனேசியாவில் சற்று முன்னர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வினால்  கட்டடங்கள் குலுங்கியதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்தோனேஷியாவின் வட மேற்கில் உள்ள சோரங் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில், 64 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது.இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply