தமிழகத்தில் மதுவிலக்கு–இலங்கை மீது சர்வதேச விசாரணை: சென்னையில் இன்று ஜி.கே.வாசன் உண்ணாவிரதம்

vasanதமிழகத்தில் பூரண மது விலக்கை அமுல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். மனித உரிமை மீறுதல் குறித்து சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடி உரிமையை மீட்டுத் தரவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி த.மா.கா. சார்பில் இன்று உண்ணாவிரதம் நடைபெறும் என்று ஜி.கே.வாசன் அறிவித்து இருந்தார்.

அதன்படி இன்று காலையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

காலை 10 மணியளவில் உண்ணாவிரத பந்தலுக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

த.மா.கா. தொடங்கிய பிறகு மாநில அளவிலான முதல் உண்ணாவிரத போராட்டம் என்பதால் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply