தலைவர்கள் தாம் மாத்திரந்தான் நம்பிக்கையானவர்கள் என்று நினைப்பது ஒரு வெட்கக்கேடான விடயம் : கோபி அன்னான்
ஆப்பிரிக்க நாடுகளின் அதிபர்கள் ஜனநாயக விரோத ஆட்சிகளை நடத்துவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தலைவரான கோபி அன்னான் அவர்கள் தாக்கிப் பேசியுள்ளார்.
ஒரு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், தமது நாட்டை நடத்துவதற்கு தாம் மாத்திரந்தான் நம்பிக்கையானவர்கள் என்று பல ஆப்பிரிக்கத் தலைவர்கள் நினைப்பது ஒரு வெட்கக்கேடான விடயம் என்று அன்னான் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களினதும் அல்லாமல் மேட்டுக்குடியினரின் நலனை மாத்திரம் கவனத்தில் கொள்ளும் தலைவர்களை அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆப்பிரிக்கவில், பல இடங்களில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்றும், சட்டத்தின் ஆட்சி புறக்கணிக்கப்படுவதாகவும், நைஜீரியாவுக்கு விஜயம் செய்துள்ள கோபி அன்னான் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply