ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் 30 ஆயிரம் வெளிநாட்டு இளைஞர்கள்: அமெரிக்கா உளவுத்துறை தகவல்
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த இரு நாடுகளிலும் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தனி நாடு அமைத்துள்ளனர். இந்த தீவிரவாத இயக்கத்தில் மேற்கத்திய நாடுகள் உள்பட பல வெளி நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இணைந்து வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க உளவுத் துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் 3 வெளிநாடுகளை சேர்ந்த 30 ஆயிரம் பேர் இணைந்து போரிட்டு வருகின்றனர். அவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் தங்கியுள்ளனர். கடந்த 2011–ம் ஆண்டில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. தற்போது அரேபிய நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply