காவிரி டெல்டா போராட்டத்துக்கு ம.தி.மு.க. ஆதரவு: வைகோ அறிவிப்பு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சட்டப்படி அனுபவித்து வருகின்ற காவிரி நீர் உரிமையை அடியோடு பறித்துக் கொள்ளும்விதத்தில் கர்நாடக அரசு அண்மைக் காலமாக அநீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நடுவர் மன்ற தீர்ப்பை உதறி எறிந்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் விடாமலும் காவிரிக்கு குறுக்கே புதிதாக அணைகளைக் கட்டும் ஏற்பாடுகளை செய்தும்மேற்கொண்டுள்ள அக்கிரம செயலைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு மறைமுகமாக கர்நாடகத்திற்கு உதவி செய்கிறது.
தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிரை காப்பாற்ற தண்ணீரை பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகளை
வலியுறுத்தி மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பு விவசாய சங்கங்கள் செப்டெம்பர் 29-ம் தேதியன்று (நாளை) தஞ்சை, நாகை,
திருவாரூர் மாவட்டங்களில் கடை அடைப்பு, சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இன்றைய சூழலுக்கு தேவையான இப்போராட்டத்தை ம.தி.மு.க. வரவேற்கிறது; கட்சி தோழர்கள் பங்கேற்கும் விதத்தில் மாவட்ட
செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply